சுருக்கு கம்பியில் மாட்டி 5 வயது பெண் சிறுத்தை உயிரிழப்பு..!
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி என்ற இடத்தில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் வனவிலங்கு வேட்டை ஆட வைத்திருந்த சுருக்கு கம்பியில் மாட்டி 5 வயது பெண் சிறுத்தை உயிரிழந்தது.
வண்டலூரில் இருந்து வந்த மருத்துவ குழுவினர் இரண்டு நாட்களாக சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





