--- --:--:-- --

ரூ.30-க்கு சன்னரக அரிசி – அமைச்சர் வெங்கட்ராமன்

6

கடந்த சாகுபடி பருவத்தில் கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக விளைச்சல் சரிந்தது. இதனால், தமிழ்நாட்டில் சில்லறை விநியோகத்தில் விற்கப்படுகின்ற அரிசியின் விலை ஏற்றம் கண்டுள்ளது. இதனால் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சன்னக அரசி விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரை உயர்ந்தது.

 

கடந்த வாரம், கர்நாடகா பொன்னி ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வரும் டிசம்பர் மாதம் வரை இதே நிலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் அரிசி விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

இந்நிலையில், அமைச்சர் வெங்கட்ராமன் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அமுதம் அங்காடி மூலம் மளிகை பொருட்கள் குறைவான விலைக்கு வழங்கப்படுகிறது. ரூ.85 உள்ள அரிசி, அமுதம் அங்காடியில் ரூ.60-65 கொடுக்கப்படுகிறது.

 

கர்நாடக பொன்னி, ஆந்திர பொன்னி அரிசி வரத்து குறைவாக உள்ளது. இதனால் தான் விலைவாசி அதிகமாக உள்ளது. சன்ன ரக அரிசி அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொடுக்கப்படுகிறது. ரேஷன் கடைகளிலும் சன்ன ரக அரிசி வழங்கப்படுகிறது.

 

அமுதம் அங்காடியில் சன்னரக அரிசி ரூ.30 என்று விற்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அமுதம் அங்காடி மூலம் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். சில குறிப்பிட்ட ஆளுமைக்கு உட்பட்ட கட்சிகள் அரிசி ஆலை மூலமாக அரிசியை பதுக்குகிறார்கள்.” என பேசினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon