செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அரசு பதிவு செய்து கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவு..!
செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அரசு பதிவு செய்து கட்டணத்தை செலுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவை பிறப்பித்துள்ளது. கருமுட்டை விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்படி ஐஆர்டி சட்டம் ஒன்றின்படி கருத்தரிப்பு மையங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை பதிவு கட்டணத்தை வெளியிட்டது.
அதன்படி தமிழக அரசுகருத்தரிப்பு மையங்களை உடனே பதிவுசெய்யவும், கருமுட்டை சேமிப்பு வங்கிகள் ஐம்பதாயிரம் ரூபாயும், கருப்பையில் சேர்க்கும் ஐந்தாயிரம் ரூபாயும் நிர்ணயித்துள்ளது. இதைப்போன்று பிரசவம் வரை சிகிச்சை அளிக்கும் தியேட்டர்கள் கூடிய வாடகைத்தாய்க்கு 2 லட்சம் ரூபாயும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.





