--- --:--:-- --

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

1

மிழகத்தில் நான்கு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக நான்கு நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

லட்சத்தீவு அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon