புதையலுக்காக நண்பனை நரபலி கொடுத்த நபர்..!
ஓசூர் அருகே புதையலுக்காக நண்பனை நரபலி கொடுத்த நண்பனை போலீசார் கைது செய்தனர். ஓசூர் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் மணி இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
லக்ஷ்மணனுக்கு சொந்தமான தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும் நரபலி கொடுத்தால் புதையல் வரும் எனவும் மக்களிடம் மந்திரவாதி ஒருவர் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய நண்பர்கள் இருவரும் விவசாய தோட்டத்தில் இரண்டு அடி ஆழம் குழி தோண்டி மனித உயிரை தேடியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் லக்ஷ்மணன் தனது நண்பரான மணியை நரபலி கொடுக்க முயன்றுள்ளான். இது குறித்து தெரிந்து சுதாரித்துக்கொண்ட மணி லக்ஷ்மணனை அடித்துக் கொன்று நர பலி பூஜை செய்ததாக தெரிய வருகிறது.
இரவு ஒரு மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை புதையல் வரும் என காத்திருந்ததாக தெரிய வருகிறது. ஆனால் புதையல் வெளியே வராததால் லக்ஷ்மணனின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அவர் தப்பி ஓடியதாக தெரிகிறது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






