கிளீனிங் மாப் கைப்பிடிக்குள் சுமார் 2 கிலோ தங்கம் கடத்தல்..!
சென்னை விமான நிலையத்தில் கிளீனிங் மாப் கைப்பிடிக்குள் சுமார் 2 கிலோ தங்கத்தை மறைத்து வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக ஒப்பந்த ஊழியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
விமான நிலையத்தில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியரின் கிளீனிங் மீது சந்தேகமடைந்த கிளீனிங் மாப் மீது சந்தேகமடைந்த வீரர் கை பிடியை காட்டுமாறு கூறியுள்ளார்.
அப்பொழுது அந்தக் குழாய்க்குள் எழுபத்தி எட்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 800 கிராம் தங்கத்தை மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஊழியரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.






