சிமெண்ட் கலவை இயந்திரம் சாய்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்து..!
உளுந்தூர்பேட்டை அருகே பணியின்போது சிமெண்ட் கலவை இயந்திரம் சாய்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கட்டுமான பணியின்போது கலவை இயந்திரம் பள்ளத்துக்குள் விழுவதற்கு முன் அதன் ஓட்டுநர் நூலிழையில் உயிர் தப்பினார்.
குன்னத்தூர் கிராமத்தில் இருந்து வெளியூர் செல்லும் சாலையின் நடுவே சிறு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கம் போல்
நடைபெற்ற பணியின்போது சிமெண்ட் கலவை வாகனம் நின்றிருந்த இடத்தில் ஏற்பட்ட மண் சரிவால் அந்த வாகனத்தை தோண்டிய பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
கலவை வாகனம் சாய்வதற்கு முன் அதன் ஓட்டுநர் வாகனத்திலிருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





