--- --:--:-- --

மின்கசிவு காரணமாக நான்கு வீடுகள் எரிந்து நாசம்..!

2

கடலூரில் மின்கசிவு காரணமாக நான்கு வீடுகள் எரிந்து சாம்பலாகின. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த திருமலை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் மின் கசிவு காரணமாக கூரை வீடுகளை தீப்பிடித்தது.

 

திருமலை கிராமத்தில் அருகே இருந்த நான்கு வீடுகளில் தீ பரவியது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏற்படவில்லை. 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களில் இருந்து சேதமாகின. நான்கு தொழிலாளர் குடும்பங்கள் வீட்டை இழந்து தவித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon