90 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய ஒன்றரை வயது சிறுமி..!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் கிராமத்தில் 90 அடி ஆழத்தில் சிக்கிய ஒன்றரை வயது சிறுமி 7 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் ஒன்றரை வயது சிறுமி தவறி விழுந்துள்ளார்.
ஆழ்துளை கிணற்றில் சிறுமி விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததும் அருகில் உள்ள கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டனர். 100 முதல் 150 அடி ஆழத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுமி சிக்கியிருந்த நிலையில் ஆக்சிஜன் வாயு கொடுக்கப்பட்டது.
ஆழ்துளை கிணற்றின் அருகே ஜேசிபி மூலம் தோண்டும் பணி நடைபெற்றது. 90 அடி ஆழத்தில் மாட்டிக்கொண்ட சிறுமியை ஏழு மணி நேர கடின உழைப்பிற்குப் பின் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் போலீஸ் கிராம மக்கள் உதவியுடன் உயிருடன் மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





