திருட முயற்சித்த திருடனை ஓடும் ரயிலில் தொங்கவிட்ட பயணிகள்..!
பீகாரில் ஓடும் ரயிலில் செல்போன் திருட முயற்சித்த நபர் பல கிலோ மீட்டர் தூரம் தொங்கியபடியே பயணிக்கும் நிலையை பயணிகள் ஏற்படுத்தினர். ஜன்னல் வழியே பொருட்களை திருடுவது அதிகரித்திருப்பதாகவும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஓடும் ரயிலில் ஒருவர் ஜன்னல் வழியே திருட முயன்ற போது அவரது கைகளை பயணிகள் பிடித்துக் கொண்டனர். ரயில் வேகமாக செல்ல அந்த நபர் தனது கைகளை விட்டு விட வேண்டாம் என்று பயணிகளிடம் கேட்டிருக்கிறார். பல கிலோமீட்டர் அவரது ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு சென்றார். பின் காவலர்களிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





