அதிமுக தொடர்பான வழக்கில் மீண்டும் சிபிசிஐடி விசாரணை..!

திமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கை மீண்டும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை 15ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த பொழுது ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே கலவரம் ஏற்பட்டு வன்முறை உருவானது.

 

இது தொடர்பான வழக்குகள் அனைத்தும் பெற சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பாக கடந்த 7-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கலவரத்தின்போது பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

 

இந்த நிலையில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக எம்பி சிவி சண்முகம் தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.