--- --:--:-- --

மனைவியின் சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்த நபர்..!

8

ஒரிசாவில் மனைவியின் சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை வரவழைத்தது. புவனேஸ்வர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பகீருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும் 2 வயதில் குழந்தை உள்ளது.

 

இந்த நிலையில் கடந்த ஆண்டு சங்கீதா என்ற திருநங்கையுடன் பகீருக்கு நட்பு ஏற்பட்டது இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பகீர் தனது காதலை மனைவியிடம் சொல்லாமல் ரகசியமாக வைத்து இருந்துள்ளார். ஆனால் அவரது மனைவி எப்படியோ தன் காதலை கண்டுபிடித்தார்.

 

இந்த விவகாரம் குறித்து மனைவி உடன் அமர்ந்து பேசினார். அப்போது தன்னுடைய காதலை பகீர் மனைவியிடம் சொல்ல மனைவி அந்த திருநங்கையை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார்.

 

இதனையடுத்து இருவருக்கும் திருநங்கைகள் புடைசூழ மனைவி முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon