பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம்..!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் சென்ற அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் எந்தவித அசம்பாவிதமும் நடப்பதற்கு முன்னர் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





