நாளை காலை சிற்றுண்டி திட்டத்தை தொடக்கி வைக்கும் முதல்வர்..!
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடக்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மதுரைக்கு புறப்பட்டு சென்றார் . அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மதுரையில் நாளை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக முதலமைச்சர் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். அரசினர் விருந்தினர் இல்லத்தில் காலை 5:00 மணிக்கு மதுரையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
7.30 மணிக்கு சிற்றுண்டி தயாரிக்கும் சமையல் கூடத்தை மு க ஸ்டாலின் பார்வையிடுகிறார். பின்னர் முக்கால் மணிக்கு காலை சிற்றுண்டியை எடுத்துச் செல்லும் வாகனங்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
8 மணிக்கு மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடக்கி வைக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிற்றுண்டியை சிறுவர்களுக்கு பரிமாறுகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




