அதிவேகமாக வந்த பள்ளி வாகனம் சுற்றுலா வேன் மீது மோதி விபத்து..!
கன்னியாகுமரி அருகே அதிவேகமாக வந்த பள்ளி வாகனம் சுற்றுலா வேன் மீது மோதி விபத்துக்கு உள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன .மகாராஷ்டிராவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 18 பேர் சுசீந்திரம் சாலையில் தனியார் கார் மூலம் புறப்பட்டு சென்றனர்.
சுவாமிநாதபுரம் அருகே சென்ற பொழுது தனியார் பள்ளிக்கு சொந்தமான வாகனம் ஒன்று அதிவேகமாக வந்து நிலைதடுமாறி சுற்றுலா வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் சுற்றுலா பயணிகள் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





