--- --:--:-- --

திருமணம் செய்ய மறுத்த காதலியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்..!

9

தெலுங்கானா மாநிலத்தில் ஐந்து ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்ய மறுத்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

 

தெலுங்கானா மாநிலம் மாவட்டம் வாலாஜாபேட்டை சேர்ந்த சாய்பிரியா என்ற கல்லூரி மாணவியும் அதே பகுதியை சேர்ந்த இளைஞரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அவர்களின் திருமணத்திற்கு பிரியாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.

 

இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி மனம் விட்டு பேச போவதாக தனது இருசக்கர வாகனத்தில் வெளியே அழைத்து சென்று சிலர் திருமணம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளார். அதற்கு சாய்பிரியா மறுப்பு தெரிவித்ததால் அவரை பாலியல் வன்கொடுமை செய்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

 

சிவா என்ற உறவினரின் உதவியுடன் சடலத்தை கால்வாயில் வீசியுள்ளார். சாய் பிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon