சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ராணுவ வீரர்..!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்த போது விடுப்பில் சொந்த ஊருக்கு வரும்பொழுது 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ராணுவத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தேசிய ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





