நாய் கடித்து வலியால் துடித்த சிறுவனை கண்டு கொள்ளாமல் இருந்த நாயின் உரிமையாளர்..!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் தனது வளர்ப்பு நாய் கடித்து வலியால் துடித்த சிறுவனை நாயின் உரிமையாளர் கண்டுகொள்ளாமல் நின்றது இணையத்தில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் லிப்டிற்க்குள் பெண்மணி ஒருவர் வளர்ப்பு நாயுடன் நுழைந்துள்ளார்.
ஏற்கனவே லிஃட்டிற்குள் இருந்த சிறுவன் வெளியேறுவதற்காக கதவருகே சென்ற பொழுது சிறுவனின் காலை கடித்தது. அந்த சிறுவன் துடிக்க அந்த பெண்மணியோ அதை துளியும் சட்டை செய்யாமல் நின்றார். இது குறித்து சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் பெண்ணின் மனித நேய மற்ற செய்திகளை இணையத்தில் பலர் காண்பித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





