மருத்துவமனைக்குள் 3 யானைகள் புகுந்த வீடியோ இணையத்தில் வைரல்..!
மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்குள் 3 யானைகள் புகுந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மருத்துவமனைக்குள் புகுந்த யானைகளை கண்டு அங்கிருந்தவர்கள் அச்சமடைந்து சத்தம் போட்டு அவற்றை துரத்த முயன்றனர்.
ஆனால் யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒருஅறைக்குள் புகுந்து விட்டன. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





