--- --:--:-- --

7 மாத கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவன்..!

2

ஸ்கேன் செய்ய காத்திருந்த 7 மாத கர்ப்பிணி மனைவியை குடிபோதையில் இருந்த கணவன் உண்மையில் தாக்கிய சம்பவம் சென்னை திருவொற்றியூரில் நடைபெற்றது. எர்ணாவூர் குடியிருப்பில் மனோஜ்குமார் – சாவித்திரி தம்பதி வசித்து வந்தனர்.

 

கர்ப்பிணியான சாவித்திரி மருத்துவ பரிசோதனைக்காக திருவொற்றியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காரில் சென்றார். அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்ட நிலையில் மதியம் 1 மணிவரை சாவித்திரி காத்திருந்ததாக கூறப்படுகிறது.

 

அப்போது மது போதையில் இருந்த மனோஜ் குமார் நீண்ட நேரமாகியும் வராத மனைவியை தேடி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். போதையில் அங்கிருந்த மனைவியை கர்ப்பிணி என்றும் பாராமல் மனோஜ்குமார் தாக்கியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon