--- --:--:-- --

ஆட்டோவில் தனியாக சென்ற இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை..!

3

கோயமுத்தூரில் நள்ளிரவில் ராபிட் ஆட்டோவில் தனியாக சென்று இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூரில் பணியாற்றி வந்த அந்தப் பெண் திருப்பூரில் இருந்து பேருந்து மூலம் நள்ளிரவு 12 மணியளவில் கோயம்புத்தூர் வந்துள்ளார்.

 

இந்த நிலையில் வீட்டிற்கு சென்று அந்த பெண்ணிடம் ஆட்டோ ஓட்டுனர் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆட்டோவை நிறுத்த கோரியும் ஓட்டுநர் நிறுத்தாததால் ஆட்டோவில் இருந்து அந்த பெண் வெளியே குதித்துள்ளார்.

 

தகவல் அறிந்து அங்கு வந்த நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர் அளித்த புகாரின் பேரில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது சாதிக் என்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

 

Right Menu Icon