ராஜா ராணி 2 தொடரில் வெளியேறிய அர்ச்சனா..!
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 என்ற தொடர் படு ஹிட்டாக ஓடுகிறது. வாரா வாரா வரும் டிஆர்பி விவரங்களில் இந்த சீரியல் விஜய் டிவி தொடர்களில் 6 அல்லது 7வது இடத்தை பிடிக்கும். இதில் சமூகத்துக்கு தேவையான சில கருத்துள்ள விஷயங்களை காட்டியிருக்கிறார்கள்.
ஆல்யா மானசா நாயகியாக இதில் இருந்து விலகியது வருத்தம் என்றாலும் இப்போது ரியா நடிப்பில் சமாதானம் ஆகிவிட்டார்கள் ரசிகர்கள்.தற்போது இந்த தொடரில் இருந்து அர்ச்சனா விலகுவதாக நாம் அறிவித்திருந்தோம். இப்போது அவருக்கு பதிலாக சீரியலில் அர்ச்சனா வேடத்தில் அர்ச்சனா குமார் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.





