தன் காதலியின் காலை பிடித்து கெஞ்சிய பள்ளி மாணவனின் வீடியோ வைரல்..!
பள்ளி மாணவன் ஒருவன் தன் காதலியின் காலை பிடித்து கெஞ்சியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காதல் ஒரு சுகமான அனுபவம். அதுவும் முதல் காதல் என்றால் வானமே வசப்பட்டு விட்டது போல அதீத நம்பிக்கையும் உற்சாகமும் வந்துவிடும்.
காதலி தான் அவர்களின் உலகம். ஆனால் அந்த காதலும் முறிந்து போனால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத விபரீத முயற்சிகளில் பலர் ஈடுபடுவதுண்டு. வெகு சிலரோ எப்படியாவது தங்கள் காதலியுடன் மீண்டும் சேர வேண்டும் என நிகழ்த்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பள்ளி மாணவன் ஒருவன் தனது காதலியின் பாதங்களைப் பற்றிக் கொண்டு கெஞ்சும் வீடியோ காதலியின் மனதை பறித்ததே இல்லையோ காண்போரின் மனதை பறித்து வருகிறது.





