தொண்டையில் சிக்கிய பரோட்டாவால் ஒருவர் உயிரிழப்பு..!
இடுக்கியில் தொண்டையில் பரோட்டா சிக்கிக் கொண்டதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பழைய பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. லாரி டிரைவராக பணியாற்றி வந்துள்ளார்.
பாலாஜி பரோட்டா சாப்பிடும் பழக்கம் கொண்டவர். பொருட்களை கொண்டு சென்ற பாலாஜியும், லாரி டிரைவரும் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளனர். பாலாஜியின் தொண்டையில் பரோட்டா சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் விழுங்க முடியாமலும் மூச்சு விட முடியாமல் திணறியுள்ளார்.
இதனால் பதறிப்போன டிரைவர் உடனடியாக பாலாஜியை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பாலாஜி உயிரிழந்தார். 34 வயதான பாலாஜிக்கு சாந்தி என்ற மனைவியும் அர்ஜுனன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.






