--- --:--:-- --

துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது நடந்த சோகம்..!

5

சேலம் ஆத்தூர் அருகே ஆம்னி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் ஆம்னி பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் நடைபெற்ற துக்க நிகழ்வில் பங்கேற்றவர்கள் டீ குடிப்பதற்காக காரில் சென்றுள்ளனர்.

 

அப்பொழுது சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் பகுதியில் அவர்கள் சென்ற காரும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய ஆம்னி பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

 

Right Menu Icon