--- --:--:-- --

பாலியல் புகாரில் 65 வயது நபரை கைது செய்த போலீசார்..! மகன் தற்கொலை..!

4

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பாலியல் புகாரில் 65 வயது நபரை கைது செய்த போலீசார் அவரது மகனையும் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சில மணி நேரம் கழித்து அவரது மகன் வயல்வெளியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டான்.

 

65 வயதான சம்பத் என்பவர் கிராமத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதிகாரி 4 மணியளவில் சம்பத்தை கைது செய்த மகளிர் போலீசார், வீட்டிலிருந்த முப்பத்தி ஆறு வயது மகனையும் விசாரணைக்காக போலீஸ் ஜீப்பில் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது.

 

சில மணிநேரத்திற்குப் பின் வீட்டில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வயல்வெளியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசாரிடம் உறவினர்கள் கேட்டபோது வெங்கடேசன் பாதி வழியிலேயே போலீசில் இருந்து தப்பியோடி விட்டதாக கூறியுள்ளனர். உடலை பெற்ற உறவினர்கள் மாவட்ட எஸ்பியிடம் விசாரணை நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Right Menu Icon