திருமணமாகாத பெண்ணிற்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் தாயும், சேயும் பலி..!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே திருமணமாகாத பெண்ணிற்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தது பச்சிளம் குழந்தையும். தாயும் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பிரியா என்ற அந்த திருமணமாகாத பெண்ணுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
அவரை தனியார் மருத்துவமனை அழைத்து சென்ற பொழுது பிரியா கர்ப்பமாக இருந்ததாகவும் உடனடியாக உதவி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பிரியாவின் தாயார் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து உறவினர்களுடன் சேர்ந்து பிரசவம் பார்த்த நிலையில் குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாகவும் 5 மணி நேரம் கழித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
குழந்தை மற்றும் பிரியாவின் உடலை கூடலூர் அரசு மருத்துவமனை எடுத்து சென்ற பொழுது இறப்பில் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் போலிசாருக்கு தெரிவித்ததன் பேரில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.





