சீனாவில் மீன் மற்றும் நண்டுகளுக்கு கொரோனா பரிசோதனை..!
சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் கடல்வாழ் உயிரினங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் கடலோர மாகாணமான ஜியோமி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அந்த மாகாணத்தில் பரிசோதனை பட்டியலில் கடல்வாழ் உயிரினங்களும் சேர்க்கப்பட்டு விட்டன. மீன்கள், நண்டுகள் என கடல்வாழ் உயிரினங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கவச உடைகளை அணிந்து ஊழியர்களின் வாயில் பஞ்சை விட்டு மாதிரிகளை சேகரித்து மாதிரிகள் சேகரிக்கும் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.






