--- --:--:-- --

கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது..!

4

ங்கரன்கோவில் அருகே கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். வென்றிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த வைரவன் – முத்துமாரி தம்பதி ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

 

இருவரும் வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் செல்லும் வழியில் கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். காரில் வந்த கும்பல் கொலை செய்துவிட்டு நகைகளை பறித்து சென்றதாக மனைவி நாடகம் ஆடியுள்ளார்.

 

இந்த நிலையில் முத்துமாரியின் கூட்டாளி இசக்கி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் மனைவியே கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்ததால் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Right Menu Icon