--- --:--:-- --

11 மாத குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற கொடூர தந்தை..!

6

ந்தையே தனது 11 மாத குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற கொடூர சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கலப்பு திருமணம் செய்துகொண்ட முகேஷ் தனது தந்தை வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி மனைவியை குழந்தையையும் அழைத்து வந்துள்ளார்.

 

தந்தை ஏற்றுக் கொள்ளமாட்டார் என கூறி மனைவியை ஒரு இடத்தில் இருக்குமாறு கூறிவிட்டு குழந்தையை மட்டும் தூக்கி சென்ற முகேஷ் குழந்தையை நர்மதா கால்வாயில் வீசி கொண்டிருக்கிறார். திரும்பிவந்த முகேஷ் குழந்தையை தன் தந்தையிடம் விட்டு விட்டு வந்ததாக மனைவியிடம் பொய் கூறி இருக்கிறார்.

 

ஆனால் முகேஷ் குழந்தையை கால்வாயில் வீசியதை பார்த்த ஒருவர் அளித்த புகாரின் பேரில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் தனக்கு போதிய வருவாய் இல்லாததால் குழந்தைக்கு உணவு கூட கொடுக்க முடியாமல் இருந்ததால் கால்வாயில் வீசியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 

Right Menu Icon