கிணற்றில் தவறி விழுந்த 10 வயது சிறுமி உயிரிழப்பு..!
உத்திரமேரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டன் சேரி கிராமத்தில் 10 வயது குழந்தை கனிஷ்காவின் தாய் துணி துவைத்துக் கொண்டிருந்த பொழுது சிறுமி கனிஷ்கா எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அச்சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





