கதவை தாளிட்டு சிக்கிக்கொண்ட 3 வயது குழந்தை மீட்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வீட்டின் உட்பகுதியில் கதவை தாளிட்டு சிக்கிக்கொண்ட 3 வயது குழந்தையை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். தங்களுடைய குழந்தையுடன் பெற்றோர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெற்றோர் வெளியே சென்ற நேரம் பார்த்து வீட்டின் உள்பகுதியில் குழந்தை தாளிட்டுக் கொண்டு திறக்க முடியாமல் அழுத குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடியிருப்புவாசிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஜன்னல் கம்பியை வளைத்து அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனை உள்ளே அனுப்பி குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





