--- --:--:-- --

கார் காம்பவுண்ட் சுவரில் மோதிய விபத்தில் தாய் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.!

3

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர காம்பவுண்ட் சுவரில் மோதி கவிழ்ந்ததில் தாய் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டிச் சென்றவர் தூக்கக்கலக்கத்தில் காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் திருச்செந்தூர் சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காம்பவுண்ட் சுவர் மீது மோதிய கார் கவிழ்ந்ததில் படுகாயமடைந்த தாய்-மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

Right Menu Icon