கோவை விமான நிலையத்தை ஒட்டி இருக்கும் பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை..!
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை விமான நிலையத்தை ஒட்டி இருக்கும் பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையம், பேருந்து ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மோப்ப நாய்களும், குண்டுவெடிப்பு நிபுணர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதல் பாதுகாப்பாக விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல் ஆணையாளர் அனுமதியின்றி போன் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





