புதைத்த சடலங்களின் எலும்பு கூடுகள் மீண்டும் எரிப்பு..!
இந்தோனேசியாவில் புதைத்த சடலங்களின் எலும்பு கூடுகளை தோண்டி எடுத்து மீண்டும் எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்தோனேசியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எலும்புக்கூடுகளை ஒரே நேரத்தில் தகனம் செய்தனர். அவர்களின் ஆன்மா விடுதலை அடைந்து வாழ்க்கையை தொடர்வதாக மக்கள் தெரிவித்தனர்.
மக்கள் ஒன்று சேர்ந்து 117 பேரது சடலங்களை தோண்டி எடுத்து 20 அடி நீளத்தில் தயாரித்த பெட்டியில் வைத்தனர். பின்னர் அந்த பொம்மையை சவப்பெட்டியில் வைத்து எரித்தனர். இந்த நிகழ்வு சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.





