சுத்தமாக மேக்கப் இல்லாமல் நடிகை நதியா..!
நடிகை நதியா, ஓரு காலத்தில் அவரது பெயரை உச்சரிக்காத ரசிகரே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு 80களில் மக்கள் மனதை கவர்ந்த நாயகியாக வலம் வந்தவர்.1984ம் ஆண்டு மலையாளத்தில் Nokketha Doorathu Kannum Nattu என்ற படம் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் அப்படத்திற்காக சிறந்த நாயகி என்ற பிலிம்பேர் விருதை பெற்றார்.
பிறகு தொடர்ந்து மலையாளத்தில் நடித்த அவர் பூவே பூச்சூடவா படம் மூலம் தமிழில் அறிமுகமானார், அதற்கும் பிலிம்பேர் விருது கிடைத்தது. அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து நடித்து வந்த அவர் திருமணம், குழந்தை என பிரேக் எடுத்தார்.
இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி கலக்கி வருகிறார்.எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் நதியா இப்போது ஒரு புகைப்படம் பதிவு செய்துள்ளார். அதில் அவர் சுத்தமாக மேக்கப் இல்லாமல் இருக்கிறார், அப்புகைப்படத்திற்கும் லைக்ஸ் குவிந்து வருகிறது.





