--- --:--:-- --

மூவர்ணக் கொடியை முகப்பு படமாக வைத்துள்ள பிரதமர் மோடி..!

6

டிவிட்டர், முகநூல் என தனது சமூக வலைத்தள கணக்கு பக்கங்களில் மூவர்ணக் கொடியை முகப்பு படமாக பிரதமர் நரேந்திர மோடி வைத்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார்.

 

அத்துடன் சமூக வலைதளங்களிலும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை மூவர்ணக் கொடியை முகப்பு படமாக வைத்து தேசத்தின் சுதந்திர தினத்தை அனைவரும் போற்ற வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டிருந்தார்.

 

அறிவுறுத்தலுக்கு முன்னோடியாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் மூவர்ணக் கொடியை பிரதமர் மோடி முகப்பு படமாக வைத்துள்ளார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர், பாரதிய ஜனதா தேசிய தலைவர் , பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களும் தங்களது சமூக வலைதள முகப்பு படங்களாக மூவர்ணக் கொடியை வைத்துள்ளனர்.

Right Menu Icon