29 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர்..!
அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருபத்தி ஒன்பது கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இதில் கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாதிரி தொழிற்பயிற்சி நிலையத்தில் வகுப்பறைகள் சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் நகராட்சி தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் தொழிலாளர்களின் அலுவலகப் பயன்பாட்டுக்காக 23 கோடி ரூபாய் மதிப்பிலான 87 புதிய வாகனங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.





