திருமணமாகி 4 மாதங்கள் ஆன நிலையில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை..!
குமரி அருகே திருமணமாகி 4 மாதங்கள் ஆன நிலையில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பூதப்பாண்டி அருகே மனோஜ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அபிராமி என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகி அபிராமி கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.
மனோஜ் மற்றும் அவரது தாயார் அபிராமியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அபிராமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வரதட்சனை கொடுமையா , மாமியார் கொடுமையா போன்ற கோணங்களில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.





