குரங்கு அம்மை அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு..!
கேரளாவில் குரங்கு அம்மை அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 25 வயது இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்தது. இதனால் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனை முடிவுகள் வராத நிலையில் அந்த நபர் உயிரிழந்தார். இதனிடையே அந்த நபருக்கு சிகிச்சை அளித்ததில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இளைஞர் மரணம் தொடர்பாக விசாரிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட வேண்டும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா சார்ஜ் தெரிவித்துள்ளார்.





