இளைஞரின் வயிற்றில் இருந்த 63 நாணயங்கள்..!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இளைஞரின் வயிற்றில் 63 நாணயங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது.
அதில் அவரது வயிற்றில் நாணயங்களின் குவியலைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நாணயங்களை விழுங்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளார். இதையடுத்து அறுவை சிகிச்சையின் மூலம் வயிற்றில் இருந்து 63 நாணயங்கள் அகற்றப்பட்டுள்ளன.
இதில் பெரும்பாலானவை ஒரு ரூபாய் நாணயங்கள். நாணயங்களை விழுங்கியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.





