நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி இன்று ஆஜர்..!
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்று வரும் என அந்த கட்சி அறிவித்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 21ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரானார். அதிகாரிகள் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதில் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. அதன்படி நேஷனல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அலுவலகத்தில் இன்று மீண்டும் ஆஜராக உள்ளார். இந்நிலையில் இதற்கு நாடு முழுவதும் இன்று சத்தியாகிரக போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
சோனியா காந்தி அலுவலகத்தில் விசாரணை ஆஜராகும் போது அனைத்து மாநில காங்கிரஸ் பிரிவுகளும் அமைதியான முறையில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையே காங்கிரஸ் கட்சி அவசர ஆலோசனை கூட்டம் டெல்லி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.






