செவிலியரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற நபர்..!
கும்பகோணம் அருகே அரசு மருத்துவமனையில் பெண் ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த போதை ஆசாமி, தடுக்க வந்த மருத்துவமனை ஊழியரை பாட்டிலால் குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு மஞ்சுளா என்ற செவிலியர் மற்றும் மற்றொருவரும் பணியில் இருந்துள்ளனர். அப்போது அப்துல் ரகுமான் என்ற நபர் இரவு வந்துள்ளார். அவரிடம் தகாத வார்த்தைகளால் தகராறு செய்துள்ளார்.
அப்பொழுது அப்துல் ரகுமான் அந்த செவிலியரின் முடியை பிடித்து பாட்டிலால் குத்தி முயன்றுள்ளார். அப்போது அங்கு சதாசிவம் என்பவர் அவரை தடுத்து மஞ்சுளா மீது படாமல் இருக்க தடுத்துள்ளார். இதனால் அப்துல் ரகுமான் சதாசிவத்தை அடித்து காயப்படுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




