யூடியூபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை..!
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். நீதிபதி சுவாமிநாதன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார்.
இந்த பதிவு அவதூறு பரப்புவதாக இருக்கிறது எனக் கூறி சவுக்கு சங்கர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிபதி சுவாமிநாதன் பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடுமையான விமர்சனங்களை ஏற்கலாம் என்றும் ஆனால் அவர்களை ஏற்க முடியாது எனவும் தமது பல உத்தரவுகளை ஏற்க முடியாத வார்த்தைகளால் சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். வழக்கு தொடர்பாக முகநூல், டுவிட்டர், யூடியூப் பக்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




