--- --:--:-- --

5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்..! 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை..!

15

திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட ராயபுரம் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பாக திருப்பூர் அனைத்து வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட திருப்பூர் ராயபுரம் பகுதியை சேர்ந்த மரியசூசை என்பவரின் மகனான 38 வயது ரோச்மிலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

மேற்படி வழக்கில் குற்ற இறுதியறிக்கை திருப்பூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது . நாகராஜன், அமர்வு நீதிபதி , விரைவு மகளிர் நீதிமன்றத்தால் 18 ஆம் தேதி குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு குற்றவாளி ரோச்மிலன் மற்றும் அவரது மரியசூசை என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் , ஆயிரம் ரூபாயும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக ஆறுமாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது . மேற்படி வழக்கில் சிறப்பாக புலன்விசாரனை செய்து குற்ற இறுதியறிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணையில் உரிய சாட்சியம் சான்றாவணங்ககளை சமர்ப்பித்து எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு , இ.கா.ப பாராட்டினார் .

Right Menu Icon