--- --:--:-- --

உடல் எடையை குறைப்பதற்காக புதிய எண்டோஸ்கோப்பிக் மருத்துவ முறையை தென் தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை முதன்முறையாக வெற்றிகரமாக செய்து சாதனை..!

4.1

டல் எடையை குறைப்பதற்காக புதிய “எண்டோஸ்கோப்பிக் ஸ்லீவ் கேஸ்ட்ரோபிளாஸ்ட்டி ” மருத்துவ முறையை தென் தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை சார்ந்த டாக்டர்கள் குழு முதன்முறையாக வெற்றிகரமாக சிகிக்சை அளித்து சாதனைப் படைத்துள்ளனர்.

 

இதுபற்றி மருத்துவ இயக்குனரும் , குடல் இரைப்பை அறுவை சிகிச்சை துறையின் தலைவருமான டாக்டர் . ரமேஷ் அர்த்தநாரி, சிகிச்சை அளித்த எண்டோஸ்கோப்பி உடல் பருமன் குறைப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ், மயக்கவியல் துறை முதுநிலை நிபுணர் டாக்டர் மஹாராஜன் , மருத்துவ நிர்வாகி டாக்டர் கண்ணன் ஆகியோர்
செய்தியாளர்களிடம் கூறியதாவது :- உடல் எடையை குறைப்பதற்கான மருத்துவ முறை மிக சமீப காலமாக வளர்ச்சி கண்டு வருகிறது .

 

மிக அதிக உடல் பருமன் மற்றும் தூக்கத்தில் ஏற்படும் சுவாச குறைபாடு போன்ற பல்வேறு பிரச்சனைகளை கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த 44 வயதான நபருக்கு கடந்த ஜூலை 9 -ந்தேதி இந்த எண்டோஸ்கோப்பிக் சிகிச்சை செய்யப்பட்டது , அதைத்தொடர்ந்து , தீவிர கண்காணிப்பிற்கு பின்னர் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்காவது நாள் நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் .

 

உடல்பருமனுள்ள நோயாளிகளுக்கு, அதுவும் குறிப்பாக இடைநிலை அளவில் பிஎம்ஐ உள்ள (27.5 முதல் 37.5) நபர்களுக்கு பலன் தரக்கூடிய சிகிச்சையாக எண்டோஸ்கோப்பிக் ஸ்லீவ் கேஸ்ட்ரோபிளாஸ்ட்டி இருக்கிறது என்றனர். மேலும், அவர்கள் கூறும் போது, சில சூழ்நிலைகளில் >40 kg/m2 என்ற உயர்வான பிஎம்ஐ உள்ள நபர்களுக்கும் இச்சிகிச்சையைப் பயன்படுத்த முடியும். இந்த மருத்துவ செயல்முறையின் தனித்துவத்தின் காரணமாக, 27.5 முதல் 37.5 Kg/m2 என்ற பிஎம்ஐ உள்ள உடற்பருமன் கொண்ட நோயாளிகளே இந்த சிகிச்சைக்கு உகந்தவர்களாக இருக்கின்றனர்.

 

மிக சமீப காலமாக பிரபலமாகி வரும் “எண்டோஸ்கோப்பிக் ஸ்லீவ் கேஸ்ட்ரோபிளாஸ்ட்டி” மூலம் சிகச்சை மேற்கொண்டு கணிசமான அளவு உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது சாத்தியமாகி உள்ளது
என மேலும் தெரிவித்தனர்.

Right Menu Icon