செவிலியரை தாக்கிய போதை ஆசாமிகள்..!
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அரசு தாலுகா மருத்துவமனையில் ஆண் செவிலியரை தாக்கிய போதை நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சௌந்தர் என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டநிலையில் அவருடன் வந்த திவாகர் மற்றும் கூட்டாளிகள் ஆண் செவிலியர் கணேசனை தாக்கியதாக தெரிகிறது.
இது குறித்த தகவலின் பேரில் சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் புவனகிரி காவல் ஆய்வாளர் சரஸ்வதி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். அப்போது சௌந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.






