இமாச்சல் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு..!
Mandi: Rescue operation in progress after a bus fell into Beas river on Delhi-Manali national highway near Mandi on Saturday. PTI Photo (PTI11_5_2016_000144B)
இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குலு மாவட்டத்தின் பள்ளத்தாக்கில் பள்ளி மாணவர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 8 மணியளவில் நேரிட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினரும் இணைந்து செயல்பட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு காரணமாக விபத்து நேரிட்டதாக அமைச்சர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






