மர்மமான முறையில் உயிரிழந்த 17 இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுப்பு..!
தென்னாப்பிரிக்காவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பதினேழு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கிழக்கு லண்டனில் இரவு நேர விடுதியில் 18 முதல் 20 வயதுடைய இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட உள்ளதாக கூறியுள்ளனர் போலீசார்.
ரஷ்ய தாக்குதலால் உருக்குலைந்த கட்டிடங்களில் சிக்கிக் கொண்ட 7 வயது சிறுமியை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். கடந்த முப்பது நாட்களாக பெரிய அளவில் தாக்குதல்கள் எழுப்பப்படாத நிலையில் இன்று அதிகாலை வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டத்தின் மீது ரஷ்ய வீரர்கள் பீரங்கித் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.





