கை,கால்களை கட்டி 4வது மாடியில் இருந்து வீசப்பட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம்..!
ஆக்ராவில் இளம்பெண்ணை நான்காவது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவின் தாஜ்கஞ் பகுதியை சேர்ந்தவர் ரித்திகா சிங். இன்ஸ்டகிரம்சில பிரபலமான இவர் தனது ஆண் நண்பருடன் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
இதனிடையே அடுக்குமாடி குடியிருப்பின் 4வது தளத்தில் இருந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் அந்த நபருடன் இருப்பதை அறிந்த பெண்ணின் உறவினர்கள் அப்பார்ட்மெண்டில் அந்த பெண்ணை கொலை செய்தது உறுதியானது. இதன் பேரில் போலீசார் ஆண் நண்பர் மற்றும் உறவினரை கைது செய்தனர்.






